அருளாளன் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
உன் புகழ் கூறி சிரம் பணிவோம்
உலகம் போற்றும் உத்தமரான
உண்மை வழியில் நடத்திடுவாயே
காக்காமுனை தாருல் உலூமும்
கல்விச்சாலை உயர்த்திடச்செய்வாய்
கல்வியின் கண்ணாய் காத்திடு இறைவாய்
காருணிய நபியின் வலியினை அருள்வாய்
அருளாளன் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
உன் புகழ் கூறி சிரம் பணிவோம்
பல்கலை ஜானம் நாம் பெற வேண்டும்
படைத்தவன் எம்மை பொருந்திட வேண்டும்
பண்புகள் யாவும் நிலை பெற வேண்டும்
பார் புகழ் ஒங்க வாழ்ந்திட வேண்டும்
அருளாளன் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
உன் புகழ் கூறி சிரம் பணிவோம்
மறையினை ஏந்தி மகிழ்வுடன் வாழ்ந்த
மன்னர் முஹம்மத் வலியினை காணும்
பெற்றோர் ஆசான் மாணவர் நாமும்
நல்வழி வாழ நற்றுணை செய்வாய்
அருளாளன் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
உன் புகழ் கூறி சிரம் பணிவோம்
உலகம் போற்றும் உத்தமரான
உண்மை வழியில் நடத்திடுவாயே