-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
பாடசாலை வரலாறு
எங்கள் பாடசாலைக்கு 5 1/4 ஏக்கர் நிரந்தர காணியை வழங்கிய தனவந்தர்கள்.
லேவியர் ரசாக்
நாகூரான்
இஸ்மாயில் பரியாரி
இக்காணியில் 1964 இல் இருந்து நெசவு கைத்தொழில் நிலையமாக இயங்கி வந்த கட்டிடத்தில் 1973 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி (1973/02/12) மர்ஹூம் எ.எல் அப்துல் மஜீத் அவர்களால் அருவு வித்தியாலயம் என பெயர் சூட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் உதவி அரசாக அதிபர் திரு கே .குணராசா , கல்வி ஆலோசகர் திரு எஸ் .ராஜா கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
எமது பாடசாலையின் முதல் அதிபர் ஜனாப் எம்.பி. குத்தூஸ் , முதல் மாணவன் ஜெ.சபீக் முதலாம் வகுப்பு மாணவர் தொகை 20 ஆகும் . Log Book முதல் வசனம் " ஆணடவன் அருளால் "
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலையான தி /கிண் /தாருல் உலூம் மகா வித்தியாலயம் பல அதிபர்களதும் ஆசிரியர்களதும் சேவையின் பயனாக பல கல்வியலாளர்களையும், வைத்தியர்களையும், பொறியலாளர்களையும், சட்டத்துறையாளர்களையும் சமூக சேவையாளர்களையும் மற்றும் நாட்டின் நட்பிரஜைகளையும் சமூகத்திக்கு வழங்கி தலை நிமிர்ந்து நிக்கின்றது.
இன்று கிட்டத்தட்ட 600 மாணவர்களை கொண்ட 1சி தர பாடசாலையாக கிண்ணியா வலயத்தில் குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் தனியிடம் கொண்ட பாடசாலையாக திகழ்கிறது.